விஜய் சேதுபதியின் மவுனப்படத்தில் நடிகை அதிதி ராவ்..!
ஹிந்தியில் காந்தி டாக்ஸ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளன.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த புஷ்பக விஞ்ஞான படமே கடைசியாக வந்த மவுன படமாகவும். இந்த படத்தை தமிழில் பேசும் படம் என்ற பெயரில் வெளியிட்டனர். தற்போது 33 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி டாக்ஸ் என்ற படம் உருவாகிறது.
கிஷோர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றினார். தற்போது இரண்டாவது முறையாக அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.






