அச்சத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான்..!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்ய அனுமதித்தால் ஆயிரக்கணக்கான ஒசாமா பின்லேடன் உருவாகி விடுவார்கள் என அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் பத்திரிக்கையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் ஆப்கானிஸ்தான் மேலும் 20 ஆண்டுகள் பின்தங்கி போய்விட்டது போல் உணர்வதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து ஆட்சி புரிய நேரிட்டால் ஆயிரக்கணக்கான ஒசாமா பின்லேடன் உருவாகி விடுவார்கள் என்றும் அவர்கள் பாகிஸ்தானுடன் ஒன்றிணைந்து மத்திய ஆசியா வரை தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து விடுவார்கள் எனவும் கூறினார்.






