--- --:--:-- --

சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க போலந்து சென்றார் குமரி மாணவி..!

3

ர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க மாற்றுத்திறனாளி மாணவியான பர்வீன் போலந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீக்கா பர்வீன் சுமார் 18 வயது மாற்றுத்திறனாளி மாணவியான இவர் இந்த மாதம் 23 ஆம் நாள் போலந்து நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் கலந்து கொண்டிருந்தார்.

 

அதில் வெற்றி பெற்றும் போலந்து நாட்டில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

 

நீதிபதி மகாதேவன் மாணவியை போலந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டார். இதனால் மலையோர பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் போட்டியில் பங்கேற்க சமீபத்தில் தனது தாயாருடன் அந்த நாட்டிற்கு சென்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon