--- --:--:-- --

கார் டயர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!

6

ரணி அருகே கார் டயர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் மூன்று மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் கிராமத்தில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் காரில் புதுப்பாளையம் புதூர் கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி முனிவந்தாங்கல் கிராமம் அருகே கார் சென்றபோது முன்பக்க டயர் வெடித்ததால் கார் எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியது.

 

இதில் நிஷா என்ற மூன்று மாத குழந்தை உட்பட மூர்த்தி, பரிமளா, முனியம்மாள், கோமதி ராதிகா என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே சடலம் ஆகினர். படுகாயம் அடைந்த சசிக்குமார் கலா ஆகிய 4 பேர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon