--- --:--:-- --

துருக்கியில் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழப்பு..!

5

துருக்கியில் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கருங் கடல் பகுதி மாகாணங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. வீடுகளின் மேற்கூரையில் பரிதவிக்கின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே துருக்கியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் காட்டுத் தீ பரவி வருவதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். ஒருபுறம் கனமழை மறுபுறம் மழை என துருக்கியில் இயற்கை சீற்றம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon