--- --:--:-- --

என் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும் – யாசிகா ஆனந்த்

5

தன் வாழ்நாள் முழுக்க இதே குற்ற உணர்வுடன் தான் வாழ்வில் இருப்பேன் என யாஷிகா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் அவரது தோழி பவானி உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு நண்பர்களுடன் அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த நிலையில் விபத்திற்கு பிறகு முதல் முறையாக தன் தோழி இறப்பு குறித்து அவர் பதிவிட்டுள்ளார். தன் வாழ்க்கையில் பவானி இறப்பிற்கு நானே காரணமாக இருப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் அதனால் அந்த குற்றஉணர்ச்சியுடன் இருப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் மறைந்த தோழி மீண்டும் தன்னிடம் வருவார் எனத் தான் நம்புவதாகவும் உருக்கமாக நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon