--- --:--:-- --

கள்ளக்காதலனுடன் இருந்த மகளை கொலை செய்த தாய்..!

2

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்த சென்ற பெண்ணை கொலை செய்தது தொடர்பாக அந்த பெண்ணின் தாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஞ்சிதா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனை போலீசாருக்கு தெரியப்படுத்தாமல் சடலத்தை உறவினர்கள் எரித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த ரஞ்சிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரது உறவினர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

 

அதற்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருந்ததும், கடந்த சில தினங்களுக்கு முன் அந்த நபருடன் சென்றதால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாகக் கருதி அவரது தாய் கவிதா கணவர் கல்யாண்குமார் உள்ளிட்ட மூவர் கொலை செய்தது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon