விஜய்க்கு சிலை வைத்து ரசிகர்கள் மாலை அணிவிப்பு..!
சென்னை பனையூரில் விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் திறக்கப்பட்ட விஜய்யின் திருவுருவ சிலைக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து கொண்டாடினர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நடிகர் விஜய்யின் மக்கள் மன்ற தலைமை அலுவலகத்தில் மக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை அறிந்த அவரது அலுவலகத்திற்கு விஜய் வரவில்லை என கூறப்படுகிறது. இதனிடையில் மக்கள் மன்ற அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விஜய்யின் திருவுருவ சிலையை திறந்த நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினார். மேலும் ரசிகர்கள் பலர் சிலையின் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.






