--- --:--:-- --

20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..!

6

விதிகளை மீறியதாக 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. சமூக விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

 

இந்த நிலையில் புதிய விதிகளுக்கு உட்பட்டு மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனர்களின் 20 லட்சம் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.

 

இதுபற்றி அந்த நிறுவனம் அளித்திருக்கும் அறிக்கையில் ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து அதாவது பதிவு செய்தல், தகவல்களை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும்போது கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளர்களின் கணக்கு முடக்கப்பட்டதா கூறியிருக்கிறது.

 

இதைப் போன்று மூன்று கோடியே 20 லட்சம் பதிவுகளை நீக்கி இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon