--- --:--:-- --

மோசடி வழக்கில்  தேடப்பட்டு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கைது..!

8

மோசடி வழக்கில்  தேடப்பட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கோவையை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற மருத்துவருக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் பன்னீர்செல்வத்தை கடந்த 10 நாட்களாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடிவந்தனர்.

 

இந்த நிலையில் அவருக்கே ஏஜெண்ட்டாக செயல்பட்டு வந்த செல்வகுமார் என்ற நபரையும் போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். ஊராட்சிமன்ற தலைவர் பன்னீர்செல்வத்தின் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது ஏற்கனவே 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon