--- --:--:-- --

இணையதளத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இரு மாணவிகளுக்கு சிக்கல்..!

7

ணையதளத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக 2 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

வீஷாட் என்ற செயலி மூலமாக திருப்பூரை சேர்ந்த அக்கா-தங்கை இருவரிடமும் நட்பாக பேசிய சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் பின்னர் தவறாக நடந்து இருக்கிறார். மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்ற பின்னரும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

 

மாணவிகளின் ஆபாச படத்தை காட்டி 32 சவரன் நகைகளையும் வாங்கியுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை கொளத்தூரை சேர்ந்த செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon