நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்கிறது ஏ.கே.ராஜன் குழு..!
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்தி அறிக்கை தாக்கல் செய்கிறது. தமிழ்நாட்டில் நீட்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் மாநில அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மாற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ கே ராஜன் குழு நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கருத்துக்களை பற்றிய பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த கருத்துக்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் ஆய்வு பணிகள் முடிந்து விட்டதாகவும் நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான் என்றும் கூறியுள்ளார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




