--- --:--:-- --

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு..!

5

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அயோத்தி அருகே உத்தரகாண்ட் பகுதியில் உள்ள சேலையூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் குளித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது குடும்ப உறுப்பினர்கள் சிலர் திடீரென மூழ்கியுள்ளனர்.

 

அவர்களை காப்பாற்ற முயன்ற போது 15 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்ததுடன் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் மூழ்கி 6 பேரை உயிருடன் மீட்டனர்.

 

ஆனால் 9 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் ஆற்றில் மாயமான 9 பேரில் 6 பேரின் உடல்களை மீட்புப்படையினர் கண்டெடுத்தனர். எஞ்சிய மூன்று பேரின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon