குழந்தைக்கு மருந்து வாங்க 7 நாள்களில் திரண்ட 18 கோடி!

கேரளாவில் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு 7 நாட்களில் 18 கோடி ரூபாய் குவிந்துள்ளது. கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் – மரியம்மா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை முகமதுவுக்கு தசைச்சிதைவு நோய் ஏற்பட்டது.

 

இதற்கு சிகிச்சை அளிக்க உலகின் விலை உயர்ந்த மருந்தை வாங்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த மருந்து 18 கோடி ரூபாய் என்று தெரிவித்தனர். இதையடுத்து உள்ளூர் எம்எல்ஏ தலைமையில் குழு அமைக்கப்பட்டு தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது.

 

உள்ளூரிலும் வெளிநாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டது. தற்போது ஒரே வாரத்தில் முகமதுவின் சிகிச்சைக்கு 18 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Reply