பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சாலையில் வீசி சென்ற அதிர்ச்சி சம்பவம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


துரையில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சாலையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வரிச்சூர் அருகே சிவகங்கை சாலையில் துணி ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை கிடந்துள்ளது.

 

அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பாயூரணி போலீசார் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் குழந்தையை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Leave a Reply