அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரை அழைத்து செல்லப்படுகிறாரா..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்து விட்டதாகவும் துணை நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கேட்டிருந்தனர். 2 நாள் காவலில் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து புழல் சிறையில் இருந்த மணிகண்டனை அழைத்துக்கொண்டு காவலர்கள் மதுரை நோக்கிப் புறப்பட்டனர்.

 

காவல் நிலையத்தில் அவரிடம் கையெழுத்து பெற வேண்டி இருப்பதாக கூறி அவரை பாதியிலேயே சென்னைக்குத் திருப்பி அழைத்து வந்த நேரத்தில் காவல் நிலையத்தில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ராமநாதபுரம், மதுரைக்கு மணிகண்டனை அழைத்து சென்று விசாரணை நடத்த காவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Leave a Reply