தனியார் மருத்துவமனை மீது அளிக்கப்பட்டுள்ள புகார்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனாவுக்கு தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.

 

கேரளாவில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதி பெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் கொரொனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

 

அதற்குரிய சிகிச்சை அளிக்காமல் காப்பீடு தொகையை பெறுவதையே குறியாகக் கொண்டு இருப்பதாகவும் அங்கு 15 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

சிகிச்சை பெறும் வரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் உயிரிழப்புக்கான காரணத்தை கூற மறுப்பதாகவும் உரிய ரசீது வழங்குவது இல்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து விசாரணை நடத்தக்கோரி கூடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதனிடையே உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தங்கள் மருத்துவமனை குறித்து சிலர் அவதூறு பரப்புவதாகவும் தனியார் மருத்துவமனை கூறியுள்ளது.


Leave a Reply