இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தவெக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் 3ஆவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், அரசின் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியில் முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் ’வெற்றி தமிழகம்’ என்ற தொலைநோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டு, அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
’வெற்றி தமிழகம்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அத்திட்டங்களின் தற்போதைய நிலை, இலக்குகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





