கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு ஆபத்தில்லை – ஆய்வு முடிவு

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பஞ்சாப் அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த ஆய்வு முடிவுகளில் 98 விழுக்காடு உயிருக்கு பாதுகாப்பு என நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்தார். போலீஸிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 720 பேர் ஆய்வுக்கு உட்படுத்தியதில் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

 

அதை சுட்டிக்காட்டிய போலிசார் அதிக ஆபத்தான சூழலில் பணியாற்றுவதால் அவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்படி ஒரு தடுப்பூசி 92 விழுக்காடு பாதுகாப்பானது எனவும் இரண்டாவது தடுப்பூசி 98 விழுக்காடு பாதுகாப்பானது எனவும் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டார்.


Leave a Reply