--- --:--:-- --

இந்தியாவின் தவறான வரைப்படத்தை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்..!

4

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை வேறு நாடாக காட்டிய ட்விட்டர் நிறுவனம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் யூனியன் பிரதேசமான லடாக்கை சீனாவின் பகுதியாக டுவிட்டர் மேப் காட்டியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரிக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின்னர் ட்விட்டர் தனது தவறை திருத்திக் கொண்டதால் இந்த சர்ச்சை முடிவுற்றது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு செயலில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை தன்னுடைய மேப்பில் தனிநாடாக காட்டியுள்ளது.இந்தியாவின் தவறான மேப் காட்டப்பட்டுள்ளது. இந்த செயல் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon