ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சை செய்து அசத்திய மருத்துவர்கள்..!
சிறுநீரகப் புற்றுநோய் இறுதிக் கட்டத்தில் இருந்த பெண்ணுக்கு ஒரே நேரத்தில் சவாலான இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து புற்றுநோயிலிருந்து மீட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
54 வயதான பெண் இடது பக்க சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பது நான்காம் நிலையில் உடலின் மற்ற உறுப்புகளுக்கு பரவத் தொடங்கிய இடதுபக்க கால் தொடை எலும்பு உருக்கி உடைத்து இருப்பதையும் கண்டனர்.
சென்னை தரமணியில் உள்ள அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த 6 அப்பல்லோ மருத்துவ வல்லுநர்கள் கூடி ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையினை மேற்கொண்டு வந்த பெண்ணை புற்றுநோயிலிருந்து மீட்டுள்ளனர்.






