நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக் குஞ்சு..!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக் குஞ்சை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவருக்கு சொந்தமான கோழி ஒன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு குஞ்சுகளை பொரித்தது.
அதில் ஒரு கோழிக்குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. இதனை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றன.






