--- --:--:-- --

தேவகவுடாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் 2 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு..!

6

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவுக்கு அவதூறு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

முன்னாள் பிரதமர் தேவகவுடா கடந்த 2011ஆம் ஆண்டு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது நந்தி உள்கட்டமைப்பு நிறுவனத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி திமுகவுக்கு எதிராக நந்தி நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதால் அந்த நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon