தந்தையை அடித்து கொன்ற மகன்கள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தாயாரை தாக்கிய ஆத்திரத்தில் தந்தையை மகன்களை அடித்துக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

செங்கட்டம் பட்டியை சேர்ந்த ராஜா மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தகவல் அறிந்து அவர்களின் மகன்கள் தந்தையை உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர்.

 

அதில் சாலையில் மயங்கி விழுந்த வனராஜா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து வன ராஜாவின் இரு மகன்களையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.


Leave a Reply