15 வீடுகளுக்கு வாடகை வேண்டாம் எனக்கூறிய உரிமையாளர்..! தலா 25 கிலோ அரிசி வழங்கி உதவி..!
கோவை மாவட்டம் பெரிய காடு பகுதியில் திமுக பிரமுகர் சிவக்குமார் முதலமைச்சர் அறிவுறுத்தியது போல தன்னால் முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகிறார் அதன்படி 15 வீடு களுக்கு உரிமையாளரான அவர் 15 குடும்பத்தினரிடம் மாத வாடகை கொடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
அத்துடன் அவர்களுக்கு தலா 25 கிலோ அரிசி மற்றும் நோய்த்தடுப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சிவகுமார் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.






