இந்திய வகை கொரொனா என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு..!
இந்திய வகை கொரொனா என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரொனா வைரசுக்கு பி.1.67 என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
அதிகமாக பரவும் திறன் கொண்ட இந்த வகை கொரொனா வைரஸ் உலகளவில் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வைரஸை சமூக வலைதளங்களில் இந்தியவகை கொரொனா என்ற பெயரில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியவகை கொரொனா என்று இடம்பெற்றுள்ள சமூக வலைதள பதிவுகளை உடனடியாக நீக்கும்படி சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியானது.
உலக சுகாதார அமைப்பால் மேற்கோள் காட்டப்பட்ட அறிவியல் ரீதியான கருத்துக்களின் மூலம் இந்திய வகை கொரொனா என்று எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வகை கொரொனா என்று உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்பதும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.






