தமிழகத்தில் இன்று முதல் இ பாஸ் நடைமுறை அமல்..!
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டம் விட்டு மாவட்டம் செலவும் இ பதிவு முறை கட்டாயம் ஆகிறது. கொரொனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை சிலர் கடைப்பிடிக்கத் தவறியதால் அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி திருமணம் முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான மருத்துவம் ஆகியவற்றுக்கு மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையையும் பயணம் மேற்கொள்ள இபதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.






