--- --:--:-- --

50 லட்சம் கள்ள நோட்டுகள் வைத்திருந்த பெண்..!

8

ன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நிதி நிறுவனம் நடத்தி வந்த பெண் ஒருவரை 50 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில் கேரள திரைப்பட இயக்குனர் ஒருவரை தேடி வருகிறார்கள்.

 

வெள்ளாங்கோட்டு பகுதியில் உள்ள முந்திரி ஆலையில் கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்ததும் அங்கு சென்று சோதனையிட்டபோது சொகுசு காரில் 15 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சிந்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் வாடிக்கையாளர்களை நம்ப வைப்பதற்காக சினிமா சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் கோடி ரூபாய் நோட்டுகளை கொண்டு நிதி நிறுவனம் நடத்தியது தெரிய வந்தது.

 

இந்த நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த கேரளாவைச் சேர்ந்த சினிமா இயக்குனர் உள்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon