புதுச்சேரியில் 84 முகவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!
புதுச்சேரியில் 84 முகவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மே இரண்டாம் தேதி நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்கள் முகவர்களுக்கு முகாம்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1546 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.






