--- --:--:-- --

ஆக்ஸிஜன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு 4 பேர் உயிரிழப்பு..!

11

ந்திராவில் ஆக்ஸிஜன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் ஆக்சிஜன் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தனர். அதையடுத்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். அந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

ஆனால் நோயாளிகள் யாரும் இறக்கவில்லை என  மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் விரைவில் குழாய் அடைப்பு சரி செய்யப்படும் எனவும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக மருத்துவமனைகள்ஆம்புலன்ஸ் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon