--- --:--:-- --

கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்..!

4

மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.

 

அந்த அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்கவில்லை. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூரு அணி மீது ஐபிஎல் விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மெதுவாக பந்து வீசி எதற்காக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூபாய் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மும்பை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஆகியோர் மீது இதே நடவடிக்கைக்காக தலா ரூபாய் 12 லட்ச ரூபாய் அபராதம் .விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon