மே மாதம் மத்தியில் தினசரி தொற்று 19 ஆயிரத்தை தாண்டும்..!
தமிழகத்தில் கொரொனா தொற்று மிக வேகமாக இருப்பதால் மே மாத மத்தியில் தினசரி தொற்று 19 ஆயிரத்தைத் தாண்டும் என ஐசிஎம்ஆர் இன் தமிழக பிரிவுதுணைத் தலைவரும், பொதுசுகாதார நிபுண மருத்துவருமான பிரதீப் கௌவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தொற்றுநோய் தடுப்பு நிபுணர் மணிகண்டன் என்பவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டியுள்ளார். எனவே முகக்கவசம், தடுப்பூசி அவசியம் என்று வெளியே செல்லாமல் இருப்பதுதான் நோய்களைக் கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.






