சித்திரைத் திருவிழாவின் போது சிறப்பு பாஸ், விஐபி பாஸ்க்கும் அனுமதி இல்லை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சித்திரைத் திருவிழாவின் போது சிறப்பு பாஸ், விஐபி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

சிவகங்கையை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் சித்திரை திருவிழாவை உரிய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கண்டுகளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

 

அவர்களுக்கு அனுமதி இல்லாமல் கொரொனா மட்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் தன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் அவர்களுக்கு விழாவை காண அனுமதி மறுக்கப்படுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனிடையே திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கவேண்டும்.

 

கோவிலை சுற்றி வரும்போது பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வர் என்றும் மனுதாரர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கொரொனா தடுப்பு வழிமுறைகள் உடன் இணைந்து வழிமுறைகளை வகுத்து உள்ளதால் இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர்.

 

மேலும் சித்திரை திருவிழாவின்போது பாஸ், வி‌ஐ‌பி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என குறிப்பிட்ட நீதிபதிகள் பக்தர்களுக்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்தனர்.


Leave a Reply