--- --:--:-- --

திருப்பூர், அனுப்பர்பாளையம்புதூர் பள்ளிவாசலில் 3 ஆம் ஆண்டு விழா

14

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரில் உள்ள மஸ்ஜிதே சித்திக் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் மதரஸாவின் 3 ஆண்டு விழா பள்ளிவாசல் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளிவாசல் தலைவர் முஹம்மது முபாரக் தலைமை தாங்கினார்.

 

பொருளாளர் பஷீர் அஹமது வரவேற்றார். பள்ளிவாசல் ஹஜ்ரத் முஹம்மது இஸ்மாயில் ஆண்டு விழா குறித்தும் அதன் பலன்கள் உள்பட பல்வேறு தலைப்புகளில் பயான் என்னும் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

 

தொடர்ந்து மதரஸா மாணவ மாணவிகள் 50 க்கும் மேற்பட்டோருக்கு பேச்சு, மனனம், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் குமரன் காலனி பள்ளிவாசல் தலைவர் அன்வர் பாஷா, முபாரக் அலி, பிச்சை கனி, உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் பாரூக், கோல்டன் பிரியாணி ரிஜ்வான் ஆகியோர் செய்து இருந்தனர்.

 

படம் : அனுப்பர்பாளையம் பள்ளிவாசல் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவ மாணவிகளுடன் பள்ளிவாசல் நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon