--- --:--:-- --

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரொனா தொற்று உறுதி..!

3

திமுக எம்பியும் அந்த கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

 

நேற்று நெல்லை மாவட்டத்தில் வாக்கு சேகரித்தார். தொற்று அறிகுறிகள் இருந்த நிலையில் கரூர் அரவக்குறிச்சியில் இன்று மேற்கொள்ளவிருந்த பரப்புரையை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

 

கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon