--- --:--:-- --

வகுப்பறையில் மது அருந்தி அட்டூழியத்தில் ஈடுபடும் ஆசிரியர்..!

2

ந்திராவில் வகுப்பறையில் மது அருந்திவிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள மண்டல் பரிக்ஷார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கோட்டீஸ்வர ராவ்.

 

சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவர்கள் முன்பே மது அருந்தியபடி உணவருந்தியபடி இருந்தவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. மது அருந்திவிட்டு மது போதையில் சிறுவர்களை அடித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் மது அருந்திவிட்டு அவர்களை அடிப்பியா டியூட்டி நேரத்தில் மது அருந்தி விட்டு இப்படி நடப்பியா என்று பெண்கள் அவரை திட்டி உள்ளனர்.

 

பின்னர் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றினார். ஆனாலும் பயப்படாத அந்த ஆசிரியர் தான் அருந்திய மது பாட்டிலையும் வீடியோவில் காட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த வீடியோ குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோட்டீஸ்வர ராவ் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தியது உறுதியானது. இதையடுத்து கோடீஸ்வரராக சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

புகாருக்குள்ளான ஆசிரியர் கோடீஸ்வர ராவ் தினமும் பள்ளியில் வைத்து மது அருந்துவார் என்றும் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வார் என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon