--- --:--:-- --

மீண்டும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!

1

காராஷ்டிராவில் மீண்டும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. மால்கள், உணவகங்கள் போன்றவை இரவு 8 மணிக்கு மூடப்பட உள்ளன.

 

நாடு முழுவதும் கொரோனாவால் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,000 ஆக உள்ள நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே ஒரே நாளில்36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.

 

பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட வருகின்றன. புனே, அமராவ,தி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது . பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon