--- --:--:-- --

சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை விரைவில் தொடங்கப்படும்..!

1

சேலத்திலிருந்து சென்னைக்கு மாலை நேர விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார். சேலம் சென்னை பயணிகள் விமான சேவை தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது.

 

அதனால் சேலம் – சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து சேவையை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சேலம் விமான நிலைய இயக்குனர் அரவிந்த் ஷர்மா வரும் மே மாதம் முதல் மாலை நேர விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இரவு நேரத்தில் விமானங்கள் இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon