--- --:--:-- --

3 நாட்களில் கொரொனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..!

4

நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் கொரொனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரொனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 

இரு தினங்களுக்கு முன் 35 ஆயிரத்து 271 பேருக்கும் நேற்று முன்தினம் 39 ஆயிரத்து 726 பேருக்கும் தொற்று உறுதியானது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது.

 

இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து அமைச்சகம் விடுத்துள்ள குறிப்பில் நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon