--- --:--:-- --

20 நாட்களில் கொரொனா தொற்று 400 சதவீதம் அதிகரித்துள்ளது..!

6

பெங்களூருவில் கடந்த 20 நாட்களில் கொரொனா தொற்று 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில் 210 ஆக இருந்த தினசரி கொரொனா வைரஸ் பாதிப்பு தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது.

 

இதே வேகத்தில் போனால் வரும் 26ஆம் தேதி வாக்கில் இந்த எண்ணிக்கை 4000 முதல் 6000 ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கர்நாடகாவில் இரண்டாவது அலை வீசத் தொடங்கிவிட்டது என இதுவரை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 

ஆனால் அரசு உடனடியாக அதிரடிந டவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நிலைமை கையை மீறிப் போய் விடும் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரொனா கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதே இந்த திடீர் உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon