--- --:--:-- --

மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபாவுக்கு கொரொனா.!

5

வேளச்சேரி மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபாவுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து வேளச்சேரி தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 

சந்தோஷ் பாபு நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நேரடியாக பரப்புரையில் ஈடுபட முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும் டிஜிட்டல் முறையில் தனது பரப்புரை இருக்கும் என்றும் தனது ஆதரவாளர்கள் மக்களை சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon