புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..!
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உள்ள தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை விஜயகாந்த் தொடங்கியது முதல் அந்த கட்சி தமிழகத்தில் முரசு சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி தேர்தலிலும் முரசு சின்னத்தை ஒதுக்க கோரி அந்த கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.
அதை ஏற்று புதுச்சேரியில் தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.






