மதுரையில் காந்தியின் சிலை துணியால் மூடப்பட்டதால் சர்ச்சை..!
தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டி மதுரையில் காந்தியின் சிலை துணியால் மூடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யானைகல் பகுதியில் உள்ள காந்தி சிலையை தேர்தல் அதிகாரிகள் துணியால் மூடியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அதன் அருகே இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் மூடியிருந்த நிலையில் அந்த பகுதியினரே அதை அகற்றியுள்ளனர். இதனிடைய காந்தி சிலை மீது மூடப்பட்டிருக்கும் துணியை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.






