--- --:--:-- --

ராகுல் தொகுதியிலேயே ஆட்டம் காணும் காங்கிரஸ்! 4 தலைவர்கள் ராஜினாமா!!

Ragul 01

கேரளாவில், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில், அடுத்தடுத்து காங்கிரள் தலைவர் ராஜினாமா செய்திருப்பது, தேர்தல் நேரத்தில் அந்த கட்சிக்க் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

 

காங்கிரஸ் கட்சியையும், கோஷ்டிப் பூசலையும் எப்போதும் பிரிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் அக்கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி, கோஷ்டிப்பூசல் காரணமாக பெரும் இக்கட்டில் சிக்கி இருக்கிறது.

 

குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியிலேயே, காங்கிரஸ் கட்சி பிளவுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளருமான பி.கே. அனில்குமார் மற்றும் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஜயா வேணுகோபால் ஆகியோர், கடந்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

 

இவர்களில், மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் கூறுகையில், வயநாட்டில் 3 பேர் கொண்ட கும்பல்தான் காங்கிரஸில் அதிகார வர்க்கமாக விளங்குகிறது என்றார். அவர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டார். மாநில மட்டும் மாவட்ட காங்கிரஸ் தலைமை தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக, காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியிலேயே காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டிருப்பது, அந்த கட்சிக்கு பலத்த அடியாக கருதப்படுகிறது. இதையடுத்து, மேலிட அறிவுத்தலின் பேரில் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வயநாடு தொகுதிக்கு சென்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். இந்த விவகாரம், கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon