--- --:--:-- --

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சூரிய சக்தி, காற்று ஹைட்ரஜன் மற்றும் உயிரியல் தொடர்பான தொழில்நுட்பங்களும் உள்ளனர்.

 

இதேபோல் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon