மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம்! காங்கிரஸ் கட்சி அதிரடி வாக்குறுதி!!
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அசாமில் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியை போலவே, அசாம் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதில், முதல்கட்ட தேர்தல் வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் தலைவர்கள் தீவிரமாக துவங்குகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அசாமின் தேஸ்பூரில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி அசாமில் ஆட்சிக்கு வந்தால், குடியுரிமை சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என சட்டம் இயற்றப்படும். ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
மேலும், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதத்திற்கு ரூ.2,000 வழங்குவோம். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.365 வழங்கப்படும். 5 லட்சம் புதிய அரசு வேலைகளை உருவாக்குவோம் என்று பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




