பூனையால் திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்..!
பல்வேறு காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்படுவதை கேள்விப்பட்டிருப்போம். மழை, மூடுபனி திடீரென பயணிகளுக்கு ஏற்படும் உடல்நல குறைவு போன்ற காரணங்களுக்காக விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்படுவதுண்டு.
ஆனால் சூடான் நாட்டில் ஒரு பூனை செய்த அட்டகாசம் தான் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சூடான் நாட்டின் தலைநகர் ரோமில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் காக்பிட் உள்ளே பூனை ஒன்று பதுங்கியிருந்தது.
விமானம் புறப்பட்ட அரைமணி நேரத்தில் பதுங்கியிருந்த பூனை ஆக்ரோஷமாக அங்கு உள்ளவர்களை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத விமான குழுவினர் பல முயற்சிகள் எடுத்தும் பூனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் இறுதியில் விமானத்தை தரை இறக்குவது என்று பைலட் முடிவெடுத்துள்ளார். அதனடிப்படையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.






