--- --:--:-- --

திருச்சியில் வருகிற 7ஆம் தேதி திமுகவின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது..!

7

திருச்சியில் வருகிற 7ஆம் தேதி திமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

 

திருச்சியிலே ஒரு மாநாடு போல ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை கழகத்தின் முதன்மைச் செயலாளர் நேரு அந்த பணியை மேற்கொண்டு இருக்கிறார் என்றும் தமிழகத்திற்கான தொலைநோக்குபார்வையை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon