--- --:--:-- --

கணித ஆசிரியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!

16

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அந்த பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

 

பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த சண்முகத்தின்மீது அந்த பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் தன் கையில் கட்டியிருக்கும் கயிறுகளை அறுப்பதாகவும், நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அழிப்பதாகவும் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.

 

அதன் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அதிகாரி அறிவழகன் ஆசிரியர் சண்முகத்தை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பணியிட மாற்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon