பதவியை ராஜினாமா செய்ய திமுக எம்எல்ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து இடைநீக்கம்..!
புதுச்சேரியில் பதவியை ராஜினாமா செய்ய திமுக எம்எல்ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தட்டஞ்செடி எம்எல்ஏவான வெங்கடேசன் சபாநாயகர் சிவக்கொழுந்துவை நேற்று சந்தித்து அந்த பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வைத்துள்ளார்.
இதனையடுத்து பெரும்பான்மை இல்லாததால் முதல் அமைச்சர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் வெங்கடேசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் வெங்கடேசன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் கூறியுள்ளார்.






